மணப்பாறை முனியப்பன் ஆலய கும்பாபிஷேகம்

மணப்பாறை முணியப்பசாமி கும்பாபிசேகம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள புகழ்பெற்ற முனியப்பன் ஆலயத்தில் இன்று காலை கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், விநாயகர், முனியப்பசுவாமி மற்றும் நவக்கிரக ஆலயங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த விழாவில் பல்வேறு யாகங்களும் பூஜைகளும் நடைபெற்றன. இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *